×

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கல்

கோவை, டிச.18: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்ட அயலக அணி சார்பில் கவுண்டம்பாளையத்தில் உள்ள கருணை இல்லத்தில் ஆதரவற்றோருக்கு மதிய உணவு மற்றும் கருணை இல்லத்தில் ஆதரவற்றோருக்கு மதிய உணவு மற்றும் கருணை இல்லத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட கழக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், கோவை வடக்கு மாவட்ட அயலக அணியின் மாவட்ட தலைவர் வி.பார்த்தீபன், துணைத் தலைவர் பி.செல்வராஜ், துணை அமைப்பாளர்கள் ரஞ்சித் கமல், எஸ்.விஜயன், எஸ்.ஆர் மதன், சுறா சுரேஷ், கழக வர்த்தக அணி துணை அமைப்பாளர் செந்தில், கவுண்டம்பாளையம் பகுதி செயலாளர் எஸ்.சரத், 34வது வட்ட கழக செயலாளர் தாஸ் ஆகியோருடன், மாவட்ட அயலக அணி அமைப்பாளரும், கோவை மாநகராட்சி 22வது வாட்டு கவுன்சிலர் கோவை பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Udhayanidhi Stalin ,Coimbatore ,Tamil Nadu ,Deputy Chief Minister ,Coimbatore North District Ayalakka Team ,Karunai Illama ,Kavundampalayam ,Dinakaran ,
× RELATED சென்னை என்றால் செஸ் என்பதை மீண்டும்...