×

பெண் வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

திருத்தணி, அக். 10: திருத்தணி அருகே, பொன்பாடி ரயில் நிலையம் அடுத்துள்ள ஆர்.எஸ். மங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி (60). இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், சாந்தி திருத்தணி மார்க்கெட்டில் மஞ்சள், குங்குமம் வியாபாரம் செய்து தனியாக வசித்து வருகிறார். இவர், கடந்த 3 நாட்களாக திருத்தணியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை ஆர்.எஸ். மங்காபுரத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சாந்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர், வீட்டிற்குச் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 5 சவரன் நகை, ₹2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக திருத்தணி காவல் நிலையத்தில் சாந்தி புகார் செய்தார். போலீசார் மோப்ப நாயின் உதவியுடன் வீட்டில் தடயங்களை சேகரித்தனர். மேலும், கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண் வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Ponpadi Railway Station R.S. Shanti ,Mangapuram village ,Shanthi ,Thiruthani ,
× RELATED திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு