×

இங்கிலாந்து பதிலடி

முல்தான்: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 492 ரன் குவித்து பதிலடி கொடுத்துள்ளது.  முல்தான் கிரிக்கெட் அரங்கில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 556 ரன் குவித்து ஆல் அவுட்டானது (அப்துல்லா 102, கேப்டன் ஷான் மசூத் 151, சவுத் ஷகீல் 82, சல்மான் ஆஹா 104*). 2ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்திருந்த இங்கிலாந்து, நேற்று நடந்த 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 492 ரன் குவித்துள்ளது. கிராவ்லி 78, டக்கெட் 84 ரன்னில் வெளியேறினர். ஜோ ரூட் 176 ரன், ஹாரி புரூக் 141 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

The post இங்கிலாந்து பதிலடி appeared first on Dinakaran.

Tags : England ,Multan ,Pakistan ,Multan Cricket Stadium ,Dinakaran ,
× RELATED இங்கிலாந்துக்கு எதிராக 3வது டெஸ்ட்: 239...