×

டைல்ஸ் கல்லால் தாக்கிய வாலிபர் கைது

 

ஈரோடு, அக். 9: ஈரோடு அடுத்துள்ள சித்தோடு கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பன்னீர் என்கிற பழனிசாமி (32). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது நண்பர் கனராஜ் என்பவரை பார்ப்பதற்காக வில்லரசம்பட்டி தொட்டம்பட்டி சாலையில் நடந்து சென்றார்.
அப்போது, ஈரோடு தொட்டம்பட்டியை சேர்ந்த பூபதி என்பவரது மகன் சூர்யா (22). என்பவர் பழனிசாமியை வழிமறித்து தகாத வார்த்தையில் பேசி தகராறு செய்துள்ளார்.
இதை தட்டிக்கோட்டதும் ஆத்திரமடைந்த சூர்யா அருகில் இருந்த டைல்ஸ் கல்லை எடுத்து பழனிசாமி தலையில் அடித்ததோடு கொலைமிரட்டலும் விடுத்துள்ளார். மண்டை உடைந்து சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பழனிசாமி இது குறித்து ஈரோடு வடக்கு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட சூா்யாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சூர்யா மீது ஏற்கனவே வடக்கு போலீசில் அடிதடி, கொலைமிரட்டல், கொலை முயற்சி என 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் கூறினர்.

 

The post டைல்ஸ் கல்லால் தாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Panneer ,Palaniswami ,Chithod Kolathupalayam ,Villarasambatti Thottampatti Road ,Kanraj ,
× RELATED அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை