×

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 

ஈரோடு, டிச. 7: சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் 69வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், திமுக சார்பில் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கந்தசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், செல்லப்பொன்னி, மாநகரச் செயலாளர் சுப்ரமணியம், பொருளாளர் பழனிசாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், கோட்டை பகுதிச் செயலாளர் ராமச்சந்திரன், கவுன்சிலர் தமிழ்பிரியன் மற்றும் விசிக சார்பில் மாவட்ட செயலாளர் சாதிக் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ்: ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் திருச்செல்வம் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டலத் தலைவர் ஜாபர் சாதிக், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு முதன்மை மாநிலத் துணைத் தலைவர் ஜவகர் அலி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜுபைர் அகமது, துணைத் தலைவர் பாஷா, ஊடக பிரிவு தலைவர் முகமது அர்சத், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, பேபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் புலிகள் கட்சி: தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் ஈரோடு மத்திய மாவட்ட பிரிவு சார்பில், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அப்துல் சமது, மாவட்ட பொறுப்பாளர் மீனா, நிதிச் செயலாளர் சலீம் பாஷா உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

The post அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Erode ,Dr. ,Panneer Selvam Park, Erode ,DMK ,Dinakaran ,
× RELATED அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில்...