×

வங்கதேசத்துடன் இன்று 2வது டி20: தொடரை வெல்ல இந்தியா முனைப்பு

புதுடெல்லி: இந்தியா – வங்கதேசம் மோதும் 2வது டி20 போட்டி, டெல்லி அருண் ஜெட்லி அரங்கில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள வங்கதேசம் முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 0-2 என ஒயிட்வாஷ் ஆனது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகின்றன. குவாலியரில் நடந்த முதல் டி20ல் இந்தியா 7 விக்கெட் வித்தியாத்தில் எளிதாக வென்று 1-0 என முன்னிலை வகிக்க, இன்று 2வது போட்டி டெல்லியில் நடக்கிறது. சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்துவதுடன் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. பந்துவீச்சில் அர்ஷ்தீப், வருண், மயாங்க், சுந்தர், ஹர்திக் அசத்திய நிலையில், முன்னணி பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 11.5 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது குறிப்பிடத்தக்கது. நஜ்முல் ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணியும் சவாலை சமாளிக்க காத்திருக்கிறது. இரு அணிகளும் வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இந்தியா: சூரியகுமார் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்கள்), ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ரியான் பராக், நிதிஷ் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா, ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயாங்க் யாதவ்.
வங்கதேசம்: நஜ்மல் உசைன் ஷான்டோ (கேப்டன்), பர்வேஸ் உசைன், லிட்டன் தாஸ், ஜாகிர் அலி (விக்கெட் கீப்பர்கள்), மஹேதி ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் உசைன், முஸ்டாபிசுர் ரகுமான், தஸ்கின் அகமது, தன்ஸிம் ஹசன் சாகிப், ஷோரிஃபுல் இஸ்லாம், ரகிபுல் ஹசன்.

The post வங்கதேசத்துடன் இன்று 2வது டி20: தொடரை வெல்ல இந்தியா முனைப்பு appeared first on Dinakaran.

Tags : 2nd T20I ,Bangladesh ,India ,New Delhi ,Arun Jaitley Stadium ,Delhi ,Dinakaran ,
× RELATED இங்கிலாந்து வீரர்கள் பட்டியல்...