×

ஒய்வு பெறுவதாக அறிவித்தார் வங்காளதேச அணியின் ஆல்ரவுண்டர் மஹ்முதுல்லா!

டாக்கா: இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடருக்கு பிறகு வங்காளதேச அணியின் மூத்த வீரர் மஹ்முதுல்லா டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான ஆல்ரவுண்டர் மஹ்முதுல்லா 17 ஆண்டுகளுக்கும் மேலான டி20 வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

டெல்லியில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கு முன்னதாக, போட்டிக்கு முந்தைய செய்தியாளர் கூட்டத்தில் மஹ்முதுல்லா கூறுகையில், “இந்த தொடரின் கடைசி போட்டிக்கு பிறகு நான் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. இந்த வடிவத்தில் இருந்து விலகி ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த இது சரியான நேரம்,” என்று அவர் மேலும் கூறினார்.

2007ல் கென்யாவுக்கு எதிராக தொடங்கிய மஹ்முதுல்லாவின் டி20 வாழ்க்கை, வங்கதேசத்தின் கிரிக்கெட் பயணத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது. அவர் இதுவரை 139 டி20 போட்டிகளில் விளையாடி 117.74 ஸ்டிரைக் ரேட்டில் 2,395 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் பந்துவீச்சில் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

The post ஒய்வு பெறுவதாக அறிவித்தார் வங்காளதேச அணியின் ஆல்ரவுண்டர் மஹ்முதுல்லா! appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Mahmudullah ,Dhaka ,T20 ,India ,Dinakaran ,
× RELATED ஆயுத கடத்தல் வழக்கில் உல்பா தலைவரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு