×

ஆஸி. டெஸ்ட் தொடருக்கு அழைத்துச்செல்லுங்கள்; மயங்க் யாதவ் பிரமிக்கத்தக்க பந்துவீச்சாளர்: பாக். மாஜி வீரர்கள் பாராட்டு

மும்பை : வங்கதேச அணி க்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளரான மயங்க் யாதவ் அறிமுகமானார். இப்போட்டியில் மயங்க் யாதவ், தன் முதல் ஓவரை மெய்டனாக வீசி அசத்தினார். 4 ஓவரில் 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். 149 கிலோ மீட்டர் வேகத்திற்கு பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். இந்த நிலையில் மயங்க்யாதவை பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பாசித் அலி, கம்ரன்அக்மல் வெகுவாக பாராட்டி உள்ளனர். இதுதொடர்பாக பாசித்அலி கூறுகையில், “ஒவ்வொரு வீரருக்கும் கனவு போன்ற ஒரு அறிமுகப் போட்டி மயங்க் யாதவுக்கு அமைந்துள்ளது.

முதல் ஓவரிலேயே மெய்டன் பிறகு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீச்சு என அவர் அசத்தியிருக்கிறார். காயத்திலிருந்து மீண்டு வந்திருப்பதால் அவரால் அதிவேகமாக பந்துவீசி இருக்க முடியாது. எனினும் 148, 150 என்பதும் அதிவேகம்தான். ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் மயங்க் யாதவுக்கு சூரியகுமார் யாதவ் முதல் ஓவரை வழங்கி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், இன்னும் ஆட்டம் சிறப்பாக இருந்திருக்கும். பேட்ஸ்மேன் மனதில் பயத்தை உண்டாக்கும் வீரராக மயங்க் யாதவ் இருக்கிறார். அவர் பந்து வீசும் போது பேட்ஸ்மேன்கள் காலை முன்னால் எடுத்து விளையாட பயப்படுகிறார்கள். முழு உடல் தகுதியுடன் இருந்தால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் மயங்க் யாதவை பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.

இதேபோன்று கம்ரான் அகமல் கூறுகையில், “மயங்க் பிரமிக்கத்தக்க அறிமுகத்தை பெற்று இருக்கிறார். இந்த தொடரில் அவர் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கும் வீரராக மாறிவிட்டார். இந்தியாவின் மருத்துவத்துறை சிறப்பாக இருப்பதால் ,அவர் காயத்திலிருந்து விரைவில் மீண்டு வந்துவிட்டார்’’ என்றார். இந்த நிலையில், இந்திய-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை (புதன்) டெல்லி பிரோசா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது.

The post ஆஸி. டெஸ்ட் தொடருக்கு அழைத்துச்செல்லுங்கள்; மயங்க் யாதவ் பிரமிக்கத்தக்க பந்துவீச்சாளர்: பாக். மாஜி வீரர்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Mayank Yadav ,Mumbai ,India ,T20 ,Bangladesh ,Dinakaran ,
× RELATED இந்திய போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காது: ஐசிசி அறிவிப்பு