×

அதிமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்தும் தளவாய் சுந்தரம் நீக்கம்

சென்னை: அதிமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்தும் தளவாய் சுந்தரம் நீக்கக்கப்பட்டுள்ளார். தளவாய் சுந்தரம் மீதான புகார் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதால் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக தளவாய் சுந்தரம் மீது புகார் எழுந்தது. புகார் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். குமரியில் ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்ததால் தளவாய் சுந்தரம் மீது அதிமுகவினர் புகார் கூறியிருந்தனர். கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்ததால் நடவடிக்கை என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது எம்எல்ஏவாக உள்ளார் தளவாய் சுந்தரம்.

The post அதிமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்தும் தளவாய் சுந்தரம் நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Adimuka Kumari ,Secretary of ,Eastern ,District ,Chennai ,Dalavai Sundaram ,Eastern District ,EDAPPADI PALANISAMI ,LAVAI SUNDARAM ,Aitmuka Kumari ,East ,Dinakaran ,
× RELATED அதிமுகவின் கட்டுக்கதை அறிக்கைகளை...