×

மதுபாட்டில் பதுக்கி விற்ற 2 பேர் கைது

ஊத்தங்கரை, அக்.8: சிங்காரப்பேட்டை எஸ்ஐ நித்யா மற்றும் போலீசார், கோவிந்தாபுரம் பகுதியில் ரோந்து பணி சென்றனர். அப்போது அந்த பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்த 2பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கொம்மம்பட்டியை சேர்ந்த அர்ஜூனன்(35), திருவேங்கடம்(38) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மதுபாட்டில் பதுக்கி விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Oodhangarai ,Singarappet SI Nithya ,Govindhapuram ,Arjunan ,Kommambatti ,
× RELATED திருமணமான இளம்பெண் மாயம்