×

தினையாம்பூண்டி ஊராட்சியில் கூட்டுறவு பால் உற்பத்தி நிலையம்: எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார்

மதுராந்தகம்: தினையாம்பூண்டி ஊராட்சியில் தாட்கோ மூலமாக கூட்டுறவு பால் உற்பத்தி நிலையத்தை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், தினையாம்பூண்டி ஊராட்சியில் தாட்கோ மூலமாக கூட்டுறவு பால் உற்பத்தி நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, தாட்கோ மேலாளர் ராஜசுதா தலைமை தாங்கினார்.

ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், கூட்டுறவு பால் உற்பத்தி துணை பதிவாளர் சித்ரா, சார்பதிவாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை விகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி பெருமாள் அனைவரையும் வரவேற்றார். இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு கூட்டுறவு பால் உற்பத்தி சங்கத்தை திறந்து வைத்து, பால் உற்பத்தியை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலமாக ரூ.74 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், செயற்குழு உறுப்பினர் நாகன், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி தலைவர் சசிகுமார், துணைத் தலைவர் இளமதி கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலர் பத்மா பாபு, அவைத்தலைவர் சுப்பராயன், கவுன்சிலர் அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனஞ்செழியன் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

The post தினையாம்பூண்டி ஊராட்சியில் கூட்டுறவு பால் உற்பத்தி நிலையம்: எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Dhiniyambundi panchayat ,MLA ,Sundar ,Madhurandhakam ,Kanchipuram ,South District ,TADCO ,Dhinaiyambundi panchayat ,Kanchipuram district ,Uttaramerur ,Diniyambundi panchayat ,
× RELATED மடம் கிராமத்தில் உடைப்பு ஏற்பட்ட...