- மேடம் கிராமம்
- சட்டமன்ற உறுப்பினர்
- மதுராந்தகம்
- செய்யாறு
- அம்மையீர்
- உத்திரமேரூர் ஒன்றியம்
- எம்.எல்.ஏ சுந்தர்
- சேயார்
- மத்தம் கிராமம்
- கருவேப்பம்பூண்டி ஊராட்சி
- காஞ்சிபுரம் மாவட்டம்
- பெஞ்சல் புயல்
- தின மலர்
மதுராந்தகம்: உத்திரமேரூர் ஒன்றியம் மடம் கிராமத்தில் செய்யாற்றில் உடைந்த கரை உடனடியாக சீரமைக்கப்பட்டது. இதனை, எம்எல்ஏ சுந்தர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் கருவேப்பம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட மடம் கிராமத்தில் செய்யாறு செல்கிறது. இங்கு, பெஞ்சல் புயல் காரணமாக இந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன், காரணமாக அந்த கிராமத் பகுதியில் உள்ள செய்யாற்றின் கரை திடீரென மண்ணரிப்பு ஏற்பட்டு உடைய தொடங்கியது. பின்னர், சில மணி நேரங்களிலேயே ஐந்து மீட்டர் அளவுக்கு கரை முற்றிலும் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டது. இதனால், ஆற்றின் வெள்ளம் மடம் கிராமத்தில் புகும்நிலை ஏற்பட்டது.
இதனை அடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏவிடம் கரை உடைப்பை சரி செய்து தருமாறு கோரிக்கை விட்டுத் திறந்தார். இதனையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளை மடம் பகுதிக்கு அனுப்பி கரையை சரிசெய்ய உத்தரவிட்டார். கரை உடைப்பு பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் செய்யாற்றின் கரை சீரமைக்கப்பட்டது. இந்த பணியினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ ஆய்வு செய்தார். கரை உடைப்பு காரணமாக, ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி தலைவர் சசிகுமார், துணைத்தலைவர் இளமதி கோவிந்தராஜன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மடம் கிராமத்தில் முகாமிட்டிருந்தனர்.
The post மடம் கிராமத்தில் உடைப்பு ஏற்பட்ட செய்யாற்றின் கரை சீரமைப்பு: எம்எல்ஏ சுந்தர் ஆய்வு appeared first on Dinakaran.