×

அதிமுக கூட்டத்தில் அண்ணாமலையை கிண்டலடித்த செல்லூர் ராஜூ

மதுரை: ‘ஆட்டுக்குட்டி போல தலையை ஆட்ட வேண்டாம்; அது லண்டன் போய் விட்டது’ என அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், செல்லூர் ராஜூ அண்ணாமலையை கிண்டல் அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெப்பக்குளத்தில் அதிமுக போராட்டம் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

செல்லூர் ராஜூ பேசுகையில் நிர்வாகிகளை பார்த்து, ‘நான் பேசும்போது ஆட்டுக்குட்டி போல தலையை ஆட்ட வேண்டாம். அது லண்டன் போய் விட்டது என அண்ணாமலையை கிண்டலடித்தார். இது பயங்கர சிரிப்பலையை ஏற்படுத்தியது. திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘கலர், கலராக வண்ணம் தீட்டிய ரயில்களை இயக்கி, பொதுமக்களின் பணத்தை சுரண்டும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது. மக்களை சுரண்டுகின்ற, கொள்ளையடிக்கிற அரசாக ஒன்றிய அரசு உள்ளது’ என்றார்.

The post அதிமுக கூட்டத்தில் அண்ணாமலையை கிண்டலடித்த செல்லூர் ராஜூ appeared first on Dinakaran.

Tags : CELLUR RAJU ,ANAMALAYA ,Madurai ,London ,Celluor Raju ,Annamalai ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 2025...