×

பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் இருவர் பலி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், வெளிநாட்டு பயணி உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். காரில் வைக்கப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் இந்த அசம்பாவிதம் நடந்ததாகவும், பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் இருவர் பலி! appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Islamabad ,Karachi airport ,Balochistan ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு லாலிபாப்! முன்னாள் வீரர் குமுறல்