×

அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து

 

சூளகிரி, அக்.7: சூளகிரி அருகே சப்படி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வார இறுதி நாட்களில் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. நேற்று மாலை சப்படி பகுதியில் அடுத்தடுத்து வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதிக்கொண்டன. 3க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சூளகிரி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு காரில் வந்தவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. இதையடுத்து, சடலத்தை மீட்டு போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், வழக்குப்பதிந்து உயிரிழந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

The post அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Choolagiri ,National Highway ,Chappedi ,Sapdi ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு முதல் ஊரப்பாக்கம் வரை...