×

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் வடக்கு பகுதி, 144வது வட்டச் செயலாளரும் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினருமான ஏ.ஸ்டாலின் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal Councillor A. ,Stalin ,Chennai ,Chennai Municipal Councillor A. Secretary General ,Durai Murugan ,Dimukh ,Chennai Southern District ,Madurawal North Region ,144th District ,Municipality ,
× RELATED சென்னை ராயப்பேட்டையில் ரேஷன் கடையை...