×

மின்சாரம் தாக்கி டிரைவர் பலி

தேன்கனிக்கோட்டை, அக்.4: தளி அருகே கும்ளாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜமீர்(29). டெம்போ டிரைவரான இவர், புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம், வீட்டில் உள்ள மோட்டார் பிளக் ஒன்றை கழற்ற முயன்ற போது, எதிர்பாராதவிதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே ஜமீர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், தளி போலீசார் வழக்குப்பதிந்து, ஜமீர் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

The post மின்சாரம் தாக்கி டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Jamir ,Kumlapuram ,Thali ,
× RELATED மனைவியை தவறான எண்ணத்தில் பார்ப்பதாக...