×

தேன்கனிக்கோட்டையில் குப்பை கழிவுகளை சேகரிக்கும் பணிக்கு ₹26.50 லட்சம் மதிப்பில் டிப்பர் லாரி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

தேன்கனிக்கோட்டை, அக்.2: தேன்கனிக்கோட்டை பகுதியில் குப்பை கழிவுகளை சேகரிக்கும் பணிக்கு ₹26.50 லட்சம் மதிப்பில் புதிதாக டிப்பர் லாரி வாங்க பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேன்கனிக்கோட்டை பேரூராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மஞ்சுநாத், துணைத்தலைவர் அப்துல்காலம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில், குப்பை கழிவுகளை சேகரிக்கும் பணிக்காக ₹26.50 லட்சம் மதிப்பில் புதிதாக டிப்பர் லாரி வாங்குவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், இளநிலை உதவியாளர் தேவராஜ், துப்புரவு ஆய்வாளர் நடேசன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post தேன்கனிக்கோட்டையில் குப்பை கழிவுகளை சேகரிக்கும் பணிக்கு ₹26.50 லட்சம் மதிப்பில் டிப்பர் லாரி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Tipper Lorry Municipal Council ,Dhenkanikottai ,Dhenkanikottai Municipality Ordinary Meeting ,President ,Srinivasan ,Executive Officer ,Manjunath ,lorry ,
× RELATED விநாயகர் சிலை பிரதிஷ்டை விழா