×

17 டன் கொப்பரை ₹21 லட்சத்திற்கு ஏலம்

போச்சம்பள்ளி, செப்.25: கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், போச்சம்பள்ளி தலைமையகத்தில், நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் 17 டன் கொப்பரை ₹21 லட்சத்திற்கு ஏலம் போனது. போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, ஆனந்தூர் பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரையை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் கொப்பரை கிலோவிற்கு குறைந்தபட்ச விலை ₹98 முதல் அதிகபட்சம் ₹138 வரை (சராசரியாக 128 ரூபாய்) ஏலம் போனது. கடந்த வாரத்தை விட அதிக விலை கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post 17 டன் கொப்பரை ₹21 லட்சத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Bochambally ,Krishnagiri District Agricultural Producers Cooperative Marketing Society ,Bochampalli ,Veppanappalli ,Krishnagiri ,Anandur… ,
× RELATED தகாத உறவை கணவர் கண்டித்ததால் இளம்பெண்...