×

₹2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருட முயற்சி

நாமகிரிப்பேட்டை, செப்.25:நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பச்சுடையாம்பாளையம் ஊராட்சியில், சுமார் ₹2 லட்சம் மதிப்பிலான 100 பைப்கள், 4 மோட்டார்கள் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களை ஊராட்சி நிர்வாகத்தினர் ஆட்டோவில் ஏற்றிச்சென்ற போது அப்பகுதி மக்கள் விரட்டி பிடித்தனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற 4வது வார்டு உறுப்பினர் பிரபு கூறுகையில், ‘ஊராட்சிக்கு சொந்தமான 100 பைப்புகள் மற்றும் 4 மோட்டார்கள், எலக்ட்ரிக்கல் பொருட்கள் என சுமார் ₹2 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஏலம் விடுவதற்காக கடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டது. ஆனால், ஏல அறிவிப்பு கொடுக்காமல், அனைத்து பொருட்களையும் திருடும் நோக்கத்துடன் ஊராட்சி நிர்வாகத்தினர் ஆட்டோவில் ஏற்றி சென்றனர். இதையடுத்து, நாங்கள் ஆட்டோவை வழிமறித்து கேட்கும் போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து ஆட்டோவை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றனர். அப்பகுதி மக்களின் உதவியுடன், ஆட்டோவை விரட்டி பிடித்து ஏற்றிச்சென்ற பொருட்களை மீண்டும் ஊராட்சி அலுவலகத்திலேயே வைத்து விட்டோம். இதுகுறித்து கலெக்டர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

The post ₹2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருட முயற்சி appeared first on Dinakaran.

Tags : Namakrippet ,Pachudaiyampalayam ,panchayat ,Panchayat Council 4th ,Ward ,Dinakaran ,
× RELATED நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் திமுக...