×

பழனி பஞ்சாமிர்தத்துக்கு ஆவின் நெய்யே பயன்படுத்தப்படுகிறது: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு

பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு என வதந்தி என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. திருப்பதி லட்டு சர்ச்சையை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் சிலர் பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் குறித்தும் வதந்தியை பரப்பினர். திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யபட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்னி இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற AR Foods பழனி முருகன் கோவிலுக்கும் நெய் சப்ளை செய்கிறது’ என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசு; பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு என வதந்தி. பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது. திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்யப்படவில்லை. சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பழனி பஞ்சாமிர்தத்துக்கு ஆவின் நெய்யே பயன்படுத்தப்படுகிறது: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Tamilnadu govt ,Tamil Nadu government ,Palani ,Tirupati Lattu ,
× RELATED 9 மாதத்தில் 20 ஆயிரம் கடைகளுக்கு சீல்...