×

முதலமைச்சர் கோப்பைக்கான குழு விளையாட்டு போட்டி

தர்மபுரி, செப்.20: தர்மபுரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான கல்லூரி மாணவிகளுக்கிடையேயான குழு விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தது. கூடைப்பந்து, கபடி, வாலிபால், கைப்பந்து, மேஜைப்பந்து, ஹாக்கி, கால்பந்து, இறகுப்பந்து, சிலம்பம், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுக்கள் மற்றும் பொதுப்பிரிவு போட்டியாளர்களுக்கான சிலம்பம் போட்டிகள் நடந்தது. இப்போட்டிகளை தர்மபுரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமார் தொடங்கி வைத்தார். இதில், 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். சிறப்பாக செயல்பட்ட மாணவிகள் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி செய்திருந்தார்.

The post முதலமைச்சர் கோப்பைக்கான குழு விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister's Cup ,Dharmapuri ,Dharmapuri District Sports Development Authority ,Chief Minister Cup ,Competition for ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்