×

காவிரிக்கரையில் பனை விதைகள் நடும் திட்டம்

 

கும்பகோணம், செப். 20: காவிரிக்கரையில் பனை விதைகள் நடும் திட்டத்தை எம்எல்ஏ ஜவாஹிருல்லா தொடக்கி வைத்தார். பாபநாசம் ஒன்றியம், இலுப்பைக்கோரை ஊராட்சி, காவிரியாற்றங்கரையில் பனை விதைகள் நடும் திட்டத்தை பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா துவக்கி வைத்தார்.

இலுப்பைக்கோரை ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், குமார், மமக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, திமுக ஒன்றிய துணைச்செயலாளர்கள் கருணாகரன், கலியமூர்த்தி, திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் மணிகண்டன், மணிமாறன், மமக மாவட்ட விவசாயிகள் அணிச்செயலாளர் முகமது பாருக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post காவிரிக்கரையில் பனை விதைகள் நடும் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Cauvery Bank ,Kumbakonam ,MLA ,Jawahirullah ,Cauvery ,Papanasam ,Cauveryatangarai ,Ilupaikorai Panchayat ,Papanasam Union ,Ilupaikorai Panchayat Council ,Kavirikkarai ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் சார்ங்கபாணிப் பெருமாள்