×

தி.மலையில் 2வது நாளாக விடியவிடிய பக்தர்கள் கிரிவலம்; அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்: கிரிவலப்பாதை, பஸ் நிலையங்களில் கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியொட்டி நேற்று காலையில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை சுவாமி தரிசனம் ெசய்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பவுர்ணமி கிரிவலம் இன்று காலை 9.04 மணிக்கு நிறைவடைந்தது. இருப்பினும் இன்று காலையிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 5 மணி முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் அலைமோதியதால், ஒற்றை தரிசன வரிசை ஏற்படுத்தப்பட்டு, ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். கிரிவலம் முடித்த பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல 9 தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையத்தில் திரண்டனர். திருவண்ணாமலை-விழுப்புரம் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயிலிலும், திருவண்ணாமலையில் இருந்து வேலூர் கண்டோன்மெண்ட் ரயில்நிலையம் வழியாக சென்னை பீச் வரை இயக்கப்படும் தினசரி ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் கலெக்டர் பாஸ்கரபாண்டின் அதிகாலை 4 மணியளவில் கிரிவல பாதை மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களை ஆய்வு செய்தார். அப்போது பக்தர்கள், கிரிவல பாதையில் உள்ள கழிவறைகளில் தண்ணீர் வசதி இல்லாததால சிரமமாக உள்ளதாக கூறினர். அதற்கு கலெக்டர், உடனடியாக லாரிகள் மூலம் கழிவறைகளில் தண்ணீர் நிரப்ப உத்தரவிட்டார்.

The post தி.மலையில் 2வது நாளாக விடியவிடிய பக்தர்கள் கிரிவலம்; அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்: கிரிவலப்பாதை, பஸ் நிலையங்களில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : T. Malai ,Krivalam ,Annamalaiyar temple ,Kriwalabathi ,Tiruvannamalai ,Swami Annamalaiyar ,Tiruvannamalai Annamalaiyar temple ,Puratasi ,Pournami Krivalam ,Thi.malai ,
× RELATED தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்;...