- செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை
- கோயம்புத்தூர்
- இந்தியா
- அமைச்சர்
- D.R.P.
- சூலூர்
- தமிழ்நாடு தொழில்கள்
- டி. ஆர். பி. ராஜா
- கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம்
- ஒய்.எஸ்
- செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா
- டிஆர்பி ராஜா பெருமிடம்
சூலூர்: செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலையின் துவக்க விழாவில் பங்கேற்ற தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இந்தியாவிலேயே தொழில் துவங்க ஏதுவான நகரம் கோவை என பெருமிதத்தோடு கூறினார். கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் ஒய்.இ.எஸ் நிறுவனம் சார்பில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை நேற்று துவங்கப்பட்டது. இதன் துவக்க விழாவில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கலந்து கொண்டு பேசியதாவது: சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த போது இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மீண்டும் தமிழக முதல்வரை சந்தித்து கூடுதலாக மேலும் ரூ.200 கோடியை தமிழ்நாட்டில் முதலீடு செய்வதாக உறுதி அளித்தனர்.
இதற்கு காரணம் தமிழக அரசின் துரிதமான சேவைகள் மற்றும் தொழில்துறையினருக்கு அனைத்து வித உதவிகளையும் செய்து தருவதுதான் தொழிலதிபர்களை தமிழகத்திற்கு ஈர்த்துள்ளது. இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை என்பது மிகவும் முக்கியமான தொழிலாகும். இந்த தொழிற்சாலைக்கு பக்கபலமாக 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கூட்டு முயற்சியே செமி கண்டக்டர் தொழிற்சாலை. எனவே, தமிழகம் செமி கண்டக்டர் உற்பத்தியில் முதலிடம் பெறும். இந்தியாவிலேயே தொழில் துவங்க ஏதுவான நகரம் கோவை ஆகும். இவ்வாறு அமைச்சர் ராஜா பேசினார்.
The post செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை துவக்க விழா; இந்தியாவில் தொழில் துவங்க ஏதுவான நகரம் கோவை: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம் appeared first on Dinakaran.