×

கண் திருஷ்டி சரி செய்வதாக பணம் பறிப்பு புகார்..!!

சென்னை: சென்னையில் கண் திருஷ்டியை சரி செய்வதாகக் கூறி மிரட்டி பணம் பறித்தவர் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.வி.யில் வந்த விளம்பரத்தை பார்த்து கண் திருஷ்டியை சரி செய்ய குறிப்பிட்ட எண்ணில் கவிதா தொடர்பு கொண்டுள்ளார். தியாகராயர் நகரிலுள்ள கவிதா வீட்டுக்கு வந்த நபர் பூஜை பொருட்கள் வாங்க வேண்டும் எனக்கூறி ரூ.1800 பெற்றுள்ளார். செய்வினை வைத்திருப்பதாக கூறி கவிதாவின் பெற்றோர் வீட்டுக்குச் சென்ற நபர் ரூ.13,200 பெற்றுள்ளார்.

The post கண் திருஷ்டி சரி செய்வதாக பணம் பறிப்பு புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,D. V. Kavita ,Kavita ,Thiagaraya ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 17,845 கன அடியாக சரிவு