×

குப்பை கொட்டும் இடத்தில் நின்றிருந்த கார் தீயில் எரிந்து நாசம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை நேரு பஜார் வீதியில் உள்ள குயவர் தெருவில் வசித்து வருபவர் மகாலிங்கம் என்பவரின் மகன் தியாகு (21). தனியார் கம்பெனியில் வேலை செய்யும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய கார் ஒன்றை வாங்கினார். இந்நிலையில் அந்த கார் வாங்கிய சில நாட்களிலிலேயே பழுதாகியுள்ளது. இதனால் தியாகு தனது வீட்டின் பின்புறத்தில் குப்பை கொட்டும் இடத்தின் அருகே காரை நிறுத்தியுள்ளார்.

இந்த கார் சுமார் 3 மாதங்களுக்கு மேலாக அதே இடத்தில் நின்றது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் குப்பைக்கு தீ வைத்துள்ளனர். இதனால் குப்பைக்கு அருகில் நின்றிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த அக்கம் பக்கத்தினர் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்குச் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து கொழுந்துவிட்டு எரிந்த கார் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதில் கார் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடானது.

The post குப்பை கொட்டும் இடத்தில் நின்றிருந்த கார் தீயில் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Oothukottai ,Thiaku ,Mahalingam ,Kuyavar Street, Nehru Bazar Road, Oothukottai ,
× RELATED எல்லாபுரம் ஒன்றியத்தில் சமூக விரோத...