×

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சேலம், செப்.17: தந்தை பெரியார் பிறந்த நாளான செப்.17ம் தேதி ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சமூகநீதிநாள் கொண்டாடப்படும் நிலையில், மிலாது நபியை முன்னிட்டு அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்றே, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. சமூக நீதி நாள் உறுதிமொழியினை கலெக்டர் பிருந்தாதேவி வாசிக்க, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) ஜெகநாதன், சிவசுப்பிரமணியன்(தேர்தல்), தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், துணை கலெக்டர் (பயிற்சி) மாருதிபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் சாரதாதேவி, துணை ஆணையாளர்கள் பூங்கொடி அருமைக்கண், பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Social Justice Day ,Salem ,Periyar ,Prophet ,Milad ,Salem Collector ,Dinakaran ,
× RELATED தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில்...