×

திமுக பவள விழாவையொட்டி 15ம் தேதி வீடுகளில் கொடியேற்ற வேண்டும்

தூத்துக்குடி, செப். 12: தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை: பேரறிஞர் அண்ணாவால் 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை கடந்து இந்த ஆண்டு பவள விழாவை நிறைவு செய்துள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்டளைக்கிணங்க, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைகளில் உள்ள அனைத்துக் கொடிக்கம்பங்களையும் வர்ணம் தீட்டி புதுப்பித்து, வரும் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள் அன்று கழக இருவண்ண கொடியை ஏற்றிட வேண்டும். மேலும், தூத்துக்குடி வடக்கு மாவட்டம் முழுவதும் உள்ள கழக நிர்வாகிகள், இளைஞர் அணி, மாணவரணி, மகளிரணி உள்ளிட்ட அணிகளின் நிர்வாகிகள் உட்பட ஒட்டுமொத்த திமுகவினர் வீடுகளிலும் வரும் 15ம் தேதி காலையிலேயே கொடியை ஏற்றி திமுக பவள விழாவை குடும்ப விழாவாக கொண்டாட வேண்டும்.

The post திமுக பவள விழாவையொட்டி 15ம் தேதி வீடுகளில் கொடியேற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : DMK coral festival ,Thoothukudi ,Thoothukudi North District ,Minister of Social Welfare and Women's Rights ,Geethajeevan ,Dravida Munnetra Kazhagam ,Perarinjar Anna ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலய முகப்பில் திமுக...