×

தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: சங்கம் வைக்கும் உரிமைக்காக சாம்சங் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை. இச்சட்டத்தை மீறுவதை அரசுகள் வேடிக்கை பார்க்கக் கூடாது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனத்தை கண்டிப்பதோடு, சட்டத்தை பின்பற்ற வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய முறையில் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

The post தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,State Secretary of ,Communist Party ,of ,India ,Balakrishnan ,Samsung ,
× RELATED மோசடி வழக்கிலிருந்து தப்பிக்க பேரம்...