×

4 நாளுக்கு பிறகு தங்கம் விலையில் மீண்டும் ஏற்றம்

சென்னை: சென்னையில், 4 நாட்களுக்கு பின்பு தங்கம் விலையில் மீண்டும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.53,440க்கும், ஒரு கிராம் ரூ. 6,680க்கும் விற்று வந்தது. தற்போது நேற்று தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதாவது, (புதன்கிழமை) நேற்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.6,715 என்று விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு ரூ.280 அதிகரித்து தற்போது ரூ.53,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவணி மாதத்தில் ஏராளமான சுப நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கம் விலை உயர்வால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் வைத்திருப்பவர்கள் கவலை அடைந்துள்ளனர்.தற்போது இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம், இறக்கம் என மாறி மாறி தள்ளாட்டம் கண்டுள்ளதால், தங்கம் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. இதனால், தங்கம் விலை சற்றே கூடி வருகிறது என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

The post 4 நாளுக்கு பிறகு தங்கம் விலையில் மீண்டும் ஏற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை பெரம்பூரில் வங்கியின் ஏடிஎம் மெஷினை உடைத்து பணத்தை திருட முயற்சி