×

தமிழ் வழிக் கல்வி இடஒதுக்கீடு – ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பிளஸ் டூ தேர்வை தனித்தேர்வராக எழுதியவருக்கும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளது என 2022-ல் குரூப்-2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்த சத்யா என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீட்டில் தனது பெயரையும் சேர்க்க வேண்டும் என சத்யா கோரிக்கை விடுத்துள்ளார். பிளஸ் டூ பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியதால் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. மனுதாரர் தமிழ் வழியில் படித்தபோதும் குடும்ப சூழலால் 12-ம் வகுப்பு தேர்வை தனித்தேர்வராக தமிழ் வழியில் எழுதியுள்ளார். தமிழ் வழியில் படித்த சான்றிதழும் பெற்றிருக்கிறார் என்பதால் இடஒதுக்கீடு பெற அவருக்கு தகுதி உள்ளது என தெரிவித்த நீதிபதி, திருப்பூரில் ஊரக வளர்ச்சித்துறை உதவியாளராக தேர்வான மனுதாரருக்கு நியமன உத்தரவு வழங்கவும் உத்தரவிட்டார்.

The post தமிழ் வழிக் கல்வி இடஒதுக்கீடு – ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Satya ,Supreme Court ,
× RELATED ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’...