×

விபத்தில் இளம்பெண் சாவு

 

கோவை, செப். 10: கோவை இடிகரை பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரின் மகள் கிருஸ்லின் ஆல்வினா (30). பேஷன் டிசைன் படிப்பு முடித்த இவர், ஆர்எஸ்புரம் பகுதியில் உள்ள துணிக்கடையில் உற்பத்தி பிரிவு மேலாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவர் காலை வழக்கம் போல் மொபட்டில் வேலைக்கு புறப்பட்டார்.

இவர், வடகோவை அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த பஸ் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில், இவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இவர் செல்லும் வழியில் இறந்து விட்டார். விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post விபத்தில் இளம்பெண் சாவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Arogya Raj ,Itigarai ,Chrislyn Alvina ,RSpuram ,
× RELATED கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒன்றிய...