×

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகள் இரும்புக்கரம் கொண்டு அழைக்கப்படுவர்: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகள் இரும்புக்கரம் கொண்டு அழைக்கப்படுவர் என ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது. ஐகோர்ட் கிளையில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியாகவுரி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் ஏராளமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

சட்டத்தை நிலை நாட்ட நீதிபதிகள், உறுதிமொழி எடுப்பதைப் போல, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என அரசு அதிகாரிகள் உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள் போல. ஐகோர்ட்டில் விசாரணை அமர்வுகள் 3 மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்படுவதை சாதகமாக்கிக் கொள்ளும் அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பில் இருந்து தப்பிக்கின்றனர். எனவே, ஆக்கிரமிப்பு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிக்க, நிரந்தர அமர்வை அமைத்து வழக்குகளை பட்டியலிட வேண்டிய நேரம் இது தான். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகள் இரும்புக்கரம் கொண்டு அழைக்கப்படுவர் என உத்தரவிட்டு விசாரணயை அக்.8க்கு தள்ளி வைத்தனர்.

The post நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகள் இரும்புக்கரம் கொண்டு அழைக்கப்படுவர்: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,iCourt branch ,R.Subramanian ,L.Victoriyakauri ,
× RELATED கல்லீரல் அறுவை சிகிச்சை கட்டமைப்பு: ஐகோர்ட் கிளை கேள்வி