×

மூணாறு அருகே விளைநிலங்களில் புகுந்து படையப்பா அட்டகாசம்

Elephant, padaiyappa, Munnarமூணாறு : முணாறு அருகே விவசாய நிலங்களுகளை நிலங்களுக்கு புகுந்து பயிர்களை, காட்டு யானை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். கேரள மாநிலம், மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வலம் வரும் காட்டு யானையான படையப்பா, கடந்த ஒரு மாதமாக மாட்டுப்பட்டி, செண்டுவாரை, குண்டலை, எல்லப்பட்டி மற்றும் சிட்டிவாரை போன்ற எஸ்டேட் பகுதிகளில் சுற்றி திரிந்தது.

2 மாத இடைவெளிக்கு பின் மீண்டும் மூணாறு நகரின் அருகே உள்ள பெரியவாரை மற்றும் கன்னிமலை எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை மூணாறு-மறையூர் ரோட்டில் பெரிய வாரை எஸ்டேட் அருகே உள்ள குருசடி பகுதியில் சாலையோரத்தில் நடமாடிய படையப்பாவை வனத்துறையினர் காட்டிற்குள் விரட்டினர்.

ஆனால் மீண்டும், நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் கன்னிமலை எஸ்டேட் லோயர் டிவிஷன் பகுதிக்குள் நுழைந்த யானை, தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட பீன்ஸ், காரட், முட்டைகோஸ் மற்றும் வாழை ஆகியவற்றை சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

The post மூணாறு அருகே விளைநிலங்களில் புகுந்து படையப்பா அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Padaiappa Attakasam ,Munaru ,Sunaru ,Muraru ,Badaiappa ,Kerala ,Matupati ,Dinakaran ,
× RELATED கொம்பன்களின் ‘குஸ்தி’ உயிரிழப்பில்...