×

இந்தாண்டின் 2வது.. நாளை உருவாகும் புயலுக்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த ASNA என பெயரிடப்படும் : இந்திய வானிலை ஆய்வு மையம்!!

டெல்லி : மத்தியக் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 2 நாட்களில் மேற்கு – வடமேற்கு திசையில் நகரும் என்றும் தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் கட்ச் மற்றும் அதனை ஒட்டிய செளராஷ்ட்ரா பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை அரபிக்கடலை அடைந்து புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் கணித்துள்ளது.

கட்ச் மற்றும் பாகிஸ்தான் கடற்கரைப் பகுதியில் புயலாக வலுப்பெற்று, அடுத்த 2 நாட்களில் இந்திய கடற்பரப்பை விட்டு நகர்ந்து வடகிழக்கு அரபிக் கடலை அடையக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வங்க கடலில் ரிமால் புயல் உருவான நிலையில், இந்தாண்டின் 2வது புயலாக இது உருவாக வாய்ப்பு உள்ளது. புயல் உருவானால் அதற்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த ASNA என பெயரிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. கேரளாவில் இன்று முதல் 4 நாட்கள் கனமழை, நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் கர்நாடக மாநிலத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 3 நாட்கள் கணமழைக்கு வாய்ப்பு உள்ளதும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post இந்தாண்டின் 2வது.. நாளை உருவாகும் புயலுக்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த ASNA என பெயரிடப்படும் : இந்திய வானிலை ஆய்வு மையம்!! appeared first on Dinakaran.

Tags : ASNA ,Pakistan ,Indian Meteorological Centre ,Delhi ,IMCI ,Middle East ,North Bank Sea ,Pakistan: ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு அரபிக்கடலில் அஸ்னா புயல் உருவானது : இந்திய வானிலை ஆய்வு மையம்