×

பாரம்பரிய கட்டிடம் சீரமைப்பு பணி தீவிரம் தம்பிக்கலை ஜய்யன் கோயில் தேர் திருவிழா

 

கோவை, ஆக.22: கோவை திருச்சி ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே வனத்துறை கட்டிடம் உள்ளது. 120 ஆண்டிற்கு முன் கட்டிய இந்த கட்டிடம் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் கவர்னர் பங்களா இருந்தது. ஆர்தர் லாலி உள்ளிட்டோர் இங்கே பணியாற்றி வந்துள்ளதாக தெரிகிறது. பின்னர் கவர்னர் பங்களா இடம் மாற்றம் செய்யப்பட்டது. வன அலுவலகமாக இந்த கட்டிடம் மாறியது. பிரிட்டீஷ் ஆட்சி காலத்திற்கு முன்னர் இந்த கட்டிடம் தனியார் வசம் இருந்தது. சூலூர் சுப்பாராவ் என்ற மிராசுதாரர் தேக்கு மரத்தில் கோட்டை தோற்றத்தில் ஓய்வு கால பங்களா கட்டினார். இவர் சூலூரில் இருந்து குதிரை வண்டியில் வந்து இந்த பங்களாவில் தங்கி ஓய்வு எடுத்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். அவர் காலத்திற்கு பின் இந்த பங்களாவை பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் கைப்பற்றியதாக தெரிகிறது.

இந்த கட்டிடத்தில் மண், கருங்கல்லுக்கு இணையாக தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. தேக்கு மரத்தூண்களை, தாங்கு தூண்களாக அமைத்துள்ளனர். 15 ஆண்டிற்கு முன் மாவட்ட வன அலுவலர் ஆர்.எஸ்.புரத்திற்கு இடம் மாற்றப்பட்டது. அதற்கு பிறகு பராமரிப்பின்றி கிடந்த கட்டிடத்தின் பெரும்பகுதி இடிந்து சரிந்துவிட்டது. கட்டிடத்தை சிலர் இரவு நேரத்தில் சமூக விரோத செயலுக்கு பயன்படுத்தி வந்தனர். கோவையின் பிரதான அடையாளமாக இருக்கும் இந்த கட்டிடத்தை பொதுப்பணித்துறையின் பாரம்பரிய பிரிவு (ெஹரி டேஜ்) மூலமாக 10.20 கோடி ரூபாய் செலவில் சீரமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவக்கப்பட்டது. கட்டிடத்தை பழைய தோற்றத்தில் அப்படியே புதுப்பிக்கும் பணி நடக்கிறது. பணிகள் வெகுவாக முடிந்துவிட்டது. இன்னும் சில மாதத்தில் பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் அரிய பொருட்களை பாதுகாக்கும் இடமாகவும் காட்சி கூடமாகவும் (மியூசியம்) அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

The post பாரம்பரிய கட்டிடம் சீரமைப்பு பணி தீவிரம் தம்பிக்கலை ஜய்யன் கோயில் தேர் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Thambikalai Jaiyan Temple Chariot Festival ,Coimbatore ,State Highway Department ,Trichy Road, Coimbatore ,Arthur Lally ,Thambikalai Jayan Temple Chariot Festival ,Dinakaran ,
× RELATED சாலை சீரமைப்பு பணி தீவிரம்