×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.5 லட்சம் நிவாரண தொகை

 

ஈரோடு, ஆக. 20: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளினால் உயிரிழந்த 5 பேரின் வாரிசுதாரர்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, சக்கர நாற்காலி மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என மொத்தம் 421 மனுக்களை அளித்தனர்.

மனுக்களை பெற்ற கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்களின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள், கடந்த முறை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, அந்தியூரில் பல்வேறு நிகழ்வுகளினால் உயிரிழந்த 5 பேரின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.5 லட்சம் நிவாரண தொகை appeared first on Dinakaran.

Tags : People's Grievance Meeting ,Erode ,Collector ,Rajagopal Sunkara ,Erode Collector ,Grievance Meeting ,Erode Collector's ,Office ,Dinakaran ,
× RELATED தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம்