×

முன்னாள் படைவீரர்கள் குறைதீர் நாள் கூட்டம்

 

சேலம், ஆக.10: சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்காகவும், தற்போது படையில் பணிபுரிவோரை சார்ந்தோர்களுக்காகவும் சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் 14ம் தேதி மாலை 4 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளது. இந்த குறைதீர் கூட்டத்தில் சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர்களும் தங்களது கோரிக்கைகளை இரட்டைப் பிரதிகளில் விண்ணப்பம் வாயிலாக நேரில் சமர்ப்பிக்கலாம. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post முன்னாள் படைவீரர்கள் குறைதீர் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Day ,Salem ,Salem District ,Collector ,Brinda Devi ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு,...