×

பீர் பாட்டிலால் தாக்கி கொண்ட வாலிபர்கள்

 

சேலம், ஆக.10: சேலம் அஸ்தம்பட்டி கண்ணன்காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ் மகன் மான் (எ) மணிகண்டன் (29). இவர் கடந்த 7ம் தேதி இரவு 10 மணியளவில், தனது வீட்டின் முன்பு இருந்துள்ளார். அப்போது ஜான்சன்பேட்டை அன்புநகரை சேர்ந்த துரை மகன் மோகன் (எ) பீட்டர் (20) வந்துள்ளார். அவர், தனது உறவினர் வீடு குறித்து மணிகண்டனிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

வாய் தகராறு முற்றிய நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொண்டனர். அப்போது மோகன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால், மணிகண்டனின் தலையில் பலமாக தாக்கி, குத்தினார். உடனே அவர், அந்த பாட்டிலை பறித்து மோகன் மீது தாக்கினார். இதில் இருவருக்கும் ரத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் வந்து, தகராறை விலக்கி விட்டனர்.

தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டனை, அவரது உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அஸ்தம்பட்டி போலீஸ் எஸ்ஐ மாணிக்கம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, இருவரின் புகாரின் பேரிலும் வழக்குப்பதிவு செய்தனர். மணிகண்டன் புகாரில் பதியப்பட்ட வழக்கில், மோகனை போலீசார் கைது செய்தனர். அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.

The post பீர் பாட்டிலால் தாக்கி கொண்ட வாலிபர்கள் appeared first on Dinakaran.

Tags : Salem ,Suresh ,Maan (A) Manikandan ,Salem Astampatty Kannankadu Housing Board ,Johnsonpet ,Dinakaran ,
× RELATED சேலம் பட்டாசு ஆலை வெடி விபத்தில்...