×

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலி

காத்மண்டு: நேபாளத்தில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். நேபாளத்தை தளமாக கொண்ட ஏர் டைனஸ்டி 9என்-ஏஜேடி தலைநகர் காத்மண்டுவில் இருந்து ரசுவாவுக்கு நேற்று பிற்பகல் 1.54 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதில் சீனாவை சேர்ந்த 4 சுற்றுலா பயணிகள் உள்பட 5 பேர் சென்றனர். இந்த ஹெலிகாப்டர் நுவாகோட் மாவட்டம் சியாப்ரூபென்சி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள மலையில் மோதி கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் சீனர்கள் உள்பட 5 பேரும் உடல் கருகி பலியாகினர். அவர்களில் 2 ஆண்கள், 1 பெண் மற்றும் ஹெலிகாப்டரை இயக்கிய விமானி அருண் மல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

The post நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Nepal ,Kathmandu ,Air Dynasty 9N-AJD ,Rasuwa ,China ,Dinakaran ,
× RELATED நேபாள பஸ் விபத்தில் பலியான 25 இந்தியர்களின் உடல் விமானம் மூலம் வந்தது