×

மார்ச் மாதத்திற்குள் 5 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அட்டை: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வேளாண் செயலாளர் தேவேஷ் சதுர்வேதி கூறியதாவது: விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் போன்ற பிரத்யேக அடையாள அட்டையை வழங்குவதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அக்டோபர் முதல் வாரத்தில் விவசாயிகள் பதிவு தொடங்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஐந்து கோடி விவசாயிகளை பதிவு செய்வதே எங்கள் இலக்கு. இதற்காக ரூ. 2,817 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் பதிவேடு உருவாக்கப்பட்டவுடன் விவசாயிகளுக்கு தனித்துவமான ஐடி வழங்கப்படும் என்றார்.

 

The post மார்ச் மாதத்திற்குள் 5 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அட்டை: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Govt. ,New Delhi ,Agriculture ,Devesh Chaturvedi ,Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED ஓடிடி தளங்களிலும் புகையிலை எதிர்ப்பு...