×

பில்லியனர் எல்லாம் அந்த காலம் உலகின் முதல் டிரில்லியனர் 2027ல் எலான் மஸ்க் ஆவார்: 2028ல் அதானி, 2033ல் அம்பானி

புதுடெல்லி: லட்சங்களில் சொத்துக்களை வைத்திருந்தால் அவரை லட்சாதிபதி என்போம். கோடிகளில் வைத்திருந்தால் கோடீஸ்வரர், ஆங்கிலத்தில் பில்லியனர் என்பார்கள். அதையும் தாண்டினால், டிரில்லியனர் (ஒரு லட்சம் கோடி). இதுவரையிலும், மைக்ரோசாப்ட், நிவிடியோ ஆப்பிள், ஆல்பாபெட், அமேசான், சவுதி அராம்கோ, மெட்டா போன்ற சில பன்னாட்டு நிறுவனங்கள் தான் 1 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை தாண்டி உள்ளன. இந்த இடத்தை விரைவில் தனிநபர்களும் பிடிப்பார்கள் என இன்பார்மோ கனெக்ட் அகடமி நிறுவனம் கணித்துள்ளது.

அதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ் சமூக ஊடகம் போன்ற நிறுவனங்களின் தலைவரும், உலகின் நம்பர்-1 கோடீஸ்வரருமான எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளது. தற்போது மஸ்க் 237 பில்லியன் டாலர் (ரூ.21 லட்சம் கோடி) சொத்துக்களுடன் 110 சதவீத வருடாந்திர வளர்ச்சியுடன் உள்ளார். இன்னும் 3 ஆண்டில் 2027ல் உலகின் முதல் டிரில்லியனர் ஆகி விடுவார். குஜராத் தொழிலதிபர் கவுதம் அதானி இப்போது 81 பில்லியன் டாலருடன் (ரூ.6.75 லட்சம் கோடி) இருந்தாலும், 123 சதவீத சராசரி வளர்ச்சியுடன் 2028ல் டிரில்லியனர் ஆவார். ஆசியாவின் நம்பர் 1 பணக்காரரான அம்பானி 2033ம் ஆண்டில் டிரில்லியனர் ஆகலாம்.

 

The post பில்லியனர் எல்லாம் அந்த காலம் உலகின் முதல் டிரில்லியனர் 2027ல் எலான் மஸ்க் ஆவார்: 2028ல் அதானி, 2033ல் அம்பானி appeared first on Dinakaran.

Tags : Elon Musk ,Adani ,Ambani ,New Delhi ,Lakshadhipati ,Microsoft ,Nvidia ,Apple ,Alphabet ,Amazon ,Saudi Aramco ,Meta ,
× RELATED வணிக விண்வெளி நடை பயணத்தை சாத்தியப்படுத்திய ஸ்பேஸ் எக்ஸ்..!!