×

ஃபின்டெக் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

புதுடெல்லி: ஃபின்டெக் நிறுவனங்களின் வரிக் கொள்கைகள் தொடர்பான தேவைகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்களைப் புரிந்துகொள்வதற்காக, ஒன்றிய நிதி அமைச்சகம் ஏதேனும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என
மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவரும் மத்திய சென்னை எம்.பியுமான தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள் விவரம்:
* ஃபின்டெக்(நிதிதொழில்நுட்ப) துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு ஏதேனும் வரிச் சலுகைகள் உள்ளதா? அந்த துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க வரிக் குறைப்புக்களை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதா?
* ஃபின்டெக் துறையில் குறிப்பிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான பிளாக் செயின், ஏ.ஐ மற்றும் டிஜிட்டல் பேங்க்கிங் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு ஏதேனும் வரிச் சலுகை ஒன்றிய அரசு வழங்க முன்மொழிகிறதா?
* பொருளாதாரம் மற்றும் தொழில்துறை, இத்தகைய வரிச் சலுகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் என்ன நன்மைகளை பெறும் என தெரிந்துகொள்ள அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டுள்ளதா?
* ஃபின்டெக் நிறுவனங்களின் வரிக் கொள்கைகள் தொடர்பான தேவைகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்களைப் புரிந்துகொள்வதற்காக,சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒன்றிய அரசு ஏதேனும் கலந்தாலோசனை மேற்கொண்டுள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன என கேள்வி எழுப்பினார்.

The post ஃபின்டெக் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Union Government ,Dayanidhi Maran ,Lok Sabha ,New Delhi ,DMK Parliamentary Committee ,Vice-Chairman ,Madhya ,Pradesh ,Union Finance Ministry ,
× RELATED எடப்பாடி பழனிசாமி நாளை நீதிமன்றத்தில் ஆஜராகிறார்..!!