×

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

டெல்லி: தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது என ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.3,380 கோடி மதிப்பில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது. இந்தியா முழுவதும் உள்ள மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்களில் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். கணினி உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமான ஹெச்.பி. நிறுவனம் தமிழ்நாட்டில் விரைவில் உற்பத்தியை தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் அமையவுள்ள ஹெச்.பி. ஆலையில் கணினி, மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ஹெச்.பி. கணினி தயாரிப்பு நிறுவனம் ஆலையை அமைக்கிறது. மின்னணு உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனமும் ஹெச்.பி. நிறுவனமும் இன்று கையெழுத்தானது. தமிழ்நாட்டில் அமையவுள்ள ஹெச்.பி. தொழிற்சாலையில் 1,500 பேர் முதல்கட்டமாக வேலைவாய்ப்பு பெறுவர்.

உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். தமிழ்நாட்டில் அமையவுள்ள ஹெச்.பி. ஆலையில் இருந்து வரும் பிப்ரவரி முதல் லேப்டாப் தயாரிக்கப்படும். மின்னணு சாதனங்களின் உற்பத்தியில் வளர்ந்து வரும் தமிழ்நாடு, ஏற்றுமதியிலும் முன்னணியில் உள்ளது என்றும் கூறினார்.

The post தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் appeared first on Dinakaran.

Tags : Sriprahumudur, Tamil Nadu ,Union Minister ,Ashwini Vaishnav ,Delhi ,Sriprahumutur, Tamil Nadu ,India ,H. R. ,Dinakaran ,
× RELATED ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க...