விருதுநகர், ஆக.5: மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் ‘சீட்’ திட்டத்தில் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு “SEED” (Scheme for Economic Empowerment DNT’s) திட்டம் மைய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம், சீர்மரபினர்களுக்கு கல்விக்கான அதிகாரமளித்தல், மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு நல்ல தரமான பயிற்சி அளித்தல், சுகாதாரம் சிறப்பு காப்பீட்டுத் திட்டம் அளித்தல், வாழ்வாதாரங்களை எளிதாக்குதல், சமூக நிறுவனங்களின் சிறிய குழுக்களை உருவாக்க மற்றும் வலுப்படுத்த சமூக மட்டத்தில் வாழ்வாதாரத்திற்கான முயற்சியை எளிதாக்குதல்,
வீட்டுமனைப் பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி வழங்குதல், மேற்கண்ட திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் மைய அரசின் இணையதளமான www.dwbdnc.dosje.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சீட் திட்டத்தில் பயன்பெற சீர் மரபினர் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.