×

ஆயுள் தண்டனை கைதி பூவரசியை விடுதலை செய்ய ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: 3 வயது குழந்தையை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பூவரசியை முன்கூட்டியே விடுதலை செய்ய சேனை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011-ல் தம்மை திருமணம் செய்ய மறுத்த ஆண் நண்பரின் 3 வயது குழந்தை கடத்தி கொன்ற வழக்கில் பூவரசிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2021-ல் அண்ணா பிறந்தநாளையொட்டி 10 ஆண்டு தண்டனை நிறைவுற்ற கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது. அரசு உத்தரவு அடிப்படையில் பூவரசியை விடுவிக்கக் கோரி கணவர் மணிகண்டன் அளித்த மனுவை தமிழ்நாடு அரசு நிராகரித்தது. தமிழ்நாடு அரசு நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பூவரசியை விடுவிக்க ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்தது.

The post ஆயுள் தண்டனை கைதி பூவரசியை விடுதலை செய்ய ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : ICOURT ,Chennai ,Chennai High Court ,Aycourt ,Dinakaran ,
× RELATED மூன்றாம் பாலினத்தவர் என்பதற்காக...