×

நாளை ஆடி அமாவாசை.. இன்று ஆடிப்பெருக்கில் தாலி கயிறு மாற்றலாமா?

ஆடி பெருக்கு சனிக்கிழமை வருவதால் தாலி கயிறு மாற்றலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆடி பெருக்கு

ஆடி மாதம் 18ம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆடிப்பெருக்கு. இந்த நாளில் கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் அமைவர்.

புது மணப்பெண்கள் புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்பது நம்பிக்கை. 2024ம் ஆண்டில் ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமை (இன்று) கொண்டாடப்படுகிறது.

தாலி கயிறு மாற்றலாமா?

இன்று மாலை 04.55 வரை சதுர்த்தசி திதி, அதன்பின் தான் அமாவாசை திதி துவங்குகிறது. இதனால், தாலி கயிறு மாற்றலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இன்று பெண்கள் தாலிக்கயிறு மாற்றிக் கொண்டால், குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகள் வரும் என்று சொல்லப்படுகிறது.

எனவே, இந்த ஆண்டு தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளும் பெண்கள் ஆடிப் பெருக்கிற்கு பதிலாக, அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் ஏதாவது ஒரு நல்ல நாளில், நல்ல நேரம் பார்த்து மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கு காரணமாக ஆடிப்பெருக்கு அன்று சகுனி கரணம் வருவது தான் தாலிக்கயிறு மாற்றுவதை தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

The post நாளை ஆடி அமாவாசை.. இன்று ஆடிப்பெருக்கில் தாலி கயிறு மாற்றலாமா? appeared first on Dinakaran.

Tags : Audi ,New Year ,Audiperuk ,Audi Peru ,Amawasai ,
× RELATED ஏன் என் கைகளுக்கு வளையல் போடக்கூடாதா?