×

அதிராம்பட்டினத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு

 

அதிராம்பட்டினம், ஆக. 3: தஞ்சை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணியின் ஏற்பாட்டில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினம் சேதுரோட்டில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
நூலக திறப்பு விழா பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கா.அண்ணாதுரை தலைமை வகித்தார். இளைஞரணி மாநில துணை செயலாளர் இளையராஜா, ரிப்பன் வெட்டி கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக பொறுப்பாளர் அஸ்லம், பொதுக்குழு உறுப்பினர் ரூஸ்வெல்ட், தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆதி.ராஜேஷ், ஹானஸ்ட் லயன்ஸ் சங்க தலைவர் குப்பாஷா அகமது கபீர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் சமூகம், கவிதை போன்ற தலைப்புகளில் புத்தகங்களை கலைஞர் நூலகத்திற்கு தானமாக வழங்கினர். மேலும் அதிராம்பட்டினத்தின் மைய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மேற்கு நகர இளைஞர் அணி அமைப்பாளர் சாகுல் ஹமீது அழைப்பு விடுத்துள்ளார்.

The post அதிராம்பட்டினத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Library ,Athirampatnam ,Athirampattanam ,Athirampattinam Sethurod ,Pattukottai ,Tanjore South District DMK ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ரூ.10...