×

வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம்

திருவாரூர், ஆக. 2: ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து திருவாரூரில் நேற்று தலைமை தபால் நிலையம் முன்பாக கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களைத் தவிர தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு உரிய நிதிஒதுக்கப்படாததை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த எம்பிக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உரிய நிதியினை ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து கடந்த மாதம் 27ம் தேதி திமுக சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இந்நிலையில் இந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான எவ்வித சலுகையும் வழங்காதது, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உரிய நிதி வழங்காதது,

தொழிலாளர்களுக்கு உரிய கூலியினை உயர்த்தி அறிவிக்காதது, மாணவர்களுக்கான கல்வி கடன் மற்றும் அக்னி பாத் திட்டத்தை ரத்து செய்யாதது போன்றவற்றினை கண்டித்தும், கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான சலுகைகளை திரும்ப பெற கோரியும் திருவாரூரில் நேற்று தலைமை தபால் நிலையம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலகுழு உறுப்பினர் மாசிலாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் (பொ) கேசவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க மாவட்ட செயலாளர் சேகர் மற்றும் பொறுப்பாளர்கள் கலைமணி, ரகுராமன், கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Communist Party ,Union Government ,Walangaiman Regulation Hall ,Tiruvarur ,Office ,Andhra ,Bihar ,Tamil Nadu ,Valangaiman ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு தொடர் சிகிச்சை